கனடியப் பிரதமரை அவமதித்த மக்கள் – சங்கடத்துடன் வெளியேறிய ஜஸ்டின்
கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை சங்கடத்துக்கு ஆளாக்கிய காணொளி சமூக ஊடகங்களில் பரவிவருகிறது.
டொரொன்ட்டோவில் உள்ள பள்ளிவாசலுக்குச் சென்றபோது அங்கிருந்தோர் அவரை இந்த நிலைக்குள்ளாக்கியுள்ளனர்.
X’ தளத்தில் அந்தக் காணொளி பெரிதும் பிரம்பல்யமடைந்துள்ளது. பள்ளிவாசலில் கூடியிருந்தோர் “Shame” அதாவது “அவமானம்” என்று கூறுவதைக் காணொளியில் கேட்கமுடிகிறது.
ட்ரூடோவை மேடையில் பேச அனுமதிக்கக்கூடாது என்றும் அவர்கள் கூறினர்.
நேற்று முன்தினம் நிகழ்ந்த டொரொன்ட்டோவின் அனைத்துலக முஸ்லிம் அமைப்பின் சந்திப்பில் பிரதமர் ட்ரூடோ கலந்துகொண்டார்.
மத்திய கிழக்கில் நிகழும் கொடூரமான சம்பவங்களால் முஸ்லிம் சமூகத்தில் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவு தெரிவிக்க ட்ரூடோ அந்தச் சந்திப்புக்குச் சென்றார்,” என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.
https://x.com/mohammed_hijab/status/1715486143523721451?s=20