ஆப்பிரிக்கா

தென்னாப்பிரிக்காவில் நீர் நாய் ஒன்று மன உளைச்சலால் எடுத்த விபரீத முடிவு

தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் பெண்ணைக் கடித்த நீர் நாய் ஒன்று மன உளைச்சலால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக அது பிரபல ஸ்ட்ராண்ட் (Strand) கடற்கரையில் ஓய்வெடுக்க முயற்சி செய்த நிலையில் அது நீர் நாய்கள் வழக்கமாக நடந்துகொள்ளும் விதம் என்று நகரின் துணை மேயர் குறிப்பிட்டார்.

ஆனால் பொதுமக்கள் அதைத் துன்புறுத்தியதுடன், கற்களை அதன் மீது வீசுவதுடன், நாய்களைவிட்டுத் தாக்குவது, கேலி செய்வது போன்றவற்றை பார்த்து நீர் நாய் மனம் நொந்துள்ளது.

அது இருப்பது தெரியாமல் அதை நோக்கி நடந்துசென்ற பெண்ணை அது தாக்கியது. அந்தப் பெண் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

நீர் நாயும் சுகாதாரப் பரிசோதனைக்காக உள்ளூர் மீன் காட்சியகத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் அது உயிரிழந்துள்ளது. இந்த நிலையில் கடற்கரைக்குச் செல்வோர் விலங்குகளைத் தொந்தரவு செய்யவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

(Visited 44 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஆப்பிரிக்கா

வடக்கு காங்கோவில் 22 பேரை கடத்திய ஆயுதம் ஏந்திய குழுவினர்!

வடக்கு காங்கோவில் உள்ள கிராமமொன்றில் இருந்து குழந்தைகள் உள்பட 22 பேர் கடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஸ்-யூலே மாகாணத்தில் உள்ள அங்கோ பிரதேசத்தில் உள்ள நகரங்களை வெள்ளை இராணுவ
ஆப்பிரிக்கா

புர்கினோ பசோவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு!

புர்கினோ பசோவின் சில பகுதிகளுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜிஹாதிகளுக்கு எதிராக போராடுவதற்கும், ஆயுதப் படைகளின் நடவடிக்கைகளை எளிதாக்கும் வகையிலும் இந்த ஊரடங்கு