இலங்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ள கடுமையான நெருக்கடி நிலை
இலங்கை மக்களின் பொருளாதார நிலையை கடுமையாக பாதிக்கும் என எரிசக்தி ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மின்கட்டண அதிகரிப்பு காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
அதிகரித்துள்ள மின் கட்டணத் தொகையை செலுத்துவதற்கு மக்கள் தமது பொருளாதார நடவடிக்கைகளில் சிலவற்றை மட்டுப்படுத்த வேண்டியிருக்கும் என எரிசக்தி ஆய்வாளர் கலாநிதி விதுர ரலபனாவ தெரிவித்தார்.
தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் மின்சார பாவனை குறையும் என எரிசக்தி ஆய்வாளர் கலாநிதி விதுர ரலபனாவ தெரிவித்தார்.
இவ்வருடத்தில் மின் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படும் மூன்றாவது சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
(Visited 18 times, 1 visits today)





