எஹலியகொட OIC சடலமாக மீட்பு! குழப்பத்தில் பொலிஸார்

எஹலியகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியங்க சில்வா துப்பாக்கிச்சூட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்தபோது அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான எஹலியகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வாதுவ பிரதேசத்தில் வசிப்பவர் என கூறப்படுகின்றது.
மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனவும், விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
(Visited 13 times, 1 visits today)