சீனாவுக்கு அணு ஆயுதக் கட்டுப்பாட்டு சூட்கேஸை கொண்டுவந்த புடின்
ரஷ்ய அதிபர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையேயான சந்திப்பின் போது, ரஷ்ய அதிபர், அணு ஆயுதக் கட்டுப்பாட்டு சூட்கேஸை ஏந்திச் சென்ற அரிய காட்சியை ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
“செகெட்” என்று அழைக்கப்படும், இந்த அணு ஆயுதக் கட்டுப்பாட்டு சூட்கேஸ் பாரம்பரியமாக ரஷ்ய கடற்படை அதிகாரியால் ஜனாதிபதியுடன் கொண்டு செல்லப்படுகிறது.
அணு ஆயுதக் கட்டுப்பாட்டு சூட்கேஸ் ரஷ்ய ஜனாதிபதி பயணம் செய்யும் போதெல்லாம் எடுத்துச் செல்லப்படுகிறது, ஆனால் அது அரிதாகவே புகைப்படம் எடுக்கப்படுகிறது.
இந்த சூட்கேஸுக்குள் இருக்கும் தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் ஜனாதிபதி தனது இராணுவ தளபதிகளை மிக ரகசியமாக தொடர்பு கொள்ளலாம்.
அணு ஆயுதத் தாக்குதலை நடத்துவதற்கு குடியரசுத் தலைவருக்கு அனுமதி வழங்குவதே இதன் முக்கியப் பணியாகும்.
(Visited 4 times, 1 visits today)