இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட வேண்டும்!
அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள இணையவழி முறைமைகளின் பாதுகாப்பு தொடர்பான சட்டமூலத்தில் பல திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் இன்று (18.100 உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், நாடாளுமன்றக் குழுவின் போது திருத்தங்கள் முன்வைக்கப்பட உள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
குறித்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி சுமார் 50 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் பிரியந்த ஜயவர்தன திறந்த நீதிமன்றில் தெரிவித்தார்.
இந்நிலையில் குறித்த மனுக்கள் அனைத்தும் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
(Visited 7 times, 1 visits today)