மணமகன் இல்லை – தன்னையே திருமணம் செய்துகொண்ட பிரித்தானிய பெண்
பிரித்தானிவை சேர்ந்த 42 வயது சாரா வில்கின்ஸன், தமது வருங்கால கணவரை இன்னும் சந்திக்காத நிலையில் கடந்த 20 ஆண்டுகளாக அவர் தமது திருமண விழாவுக்காகப் பணம் சேமித்துகொண்டு வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
விமரிசையான விழாவாகக் கொண்டாடி, திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்பது அவரின் கனவாக இருந்துள்ளது.
அந்த கனவை நனவாக்கித் தன்னையே சாரா திருமணம் செய்துகொண்டார். விழாவுக்கு ஏற்பாடு செய்து, மோதிரம் வாங்கி, தமது திருமண விழாவை நண்பர்களுடனும் உறவினர்களுடனும் அவர் கொண்டாடினார்.
மணமகன் இல்லாததால் அது அதிகாரபூர்வ திருமணம் இல்லையென்றாலும், திருமண விழாவைக் கொண்டாடியதில் மகிழ்ச்சி என்று சாரா கூறினார்.
திருமணத்துக்காகச் சேமித்த பணத்தை அதற்காகவே பயன்படுத்தியதை எண்ணி அவர் மகிழ்ந்தார். மொத்தம் 10,000 பவுண்டு செலவில் திருமணம் நடந்தேறியது.
விருந்தினர்கள் அனைவரும் சாராவுடன் கொண்டாடி மகிழ்ந்தனர். இதெல்லாம் சாராவுக்குத்தான் சாத்தியம் என்று எண்ணி எண்ணி விருந்தினர்கள் மகிழ்ந்து போயுள்ளனர்.