பாலஸ்தீனிய ஊடக வலையமைப்பின் பேஸ்புக் பக்கத்தை நீக்கியது Meta
பாலஸ்தீனத்தின் முன்னணி ஊடக வலையமைப்புகளில் ஒன்றான Quds News Network இன் Facebook கணக்கை நீக்க Meta நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய கொடூர யுத்தம் குறித்து செய்தி வெளியிட்டமையே இதற்கான காரணம் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பாக, Quds News Network தனது X சமூக ஊடகத்திலும் ஒரு குறிப்பை வெளியிட்டிருந்தது. அதன்படி Quds News Networkஇன் அரபு மற்றும் ஆங்கில முகநூல் பக்கங்கள் நீக்கப்பட்டுள்ளன.
அந்த பேஸ்புக் பக்கத்தில் சுமார் 10 மில்லியன் பின்தொடர்பவர்கள் இருந்தனர்.
2.3 மில்லியன் பாலஸ்தீனியர்கள் வாழும் மத்தியதரைக் கடலில் முற்றுகையிடப்பட்ட பகுதியான காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 2,260க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.