பிரான்ஸில் உள்ள பாடசாலைகளின் பாதுகாப்பை தீவிரப்படுத்த நடவடிக்கை
பிரான்ஸில் உள்ள உயர் நிலைப் பாடசாலையில் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
செச்சென் நாட்டைச் சேர்ந்த 20 வயதான ‘fiché S’ குற்றப் பதிவில் அறியப்பட்ட அந்த பாடசாலையின் பழைய மாணவன் நடத்திய பயங்கரவாத கத்திக்குத்து தாக்குதலில் ஒரு ஆசிரியர் கொல்லப்பட, ஒரு பேராசிரியரும் பாதுகாப்பு ஊழியரும் படுகாயம் அடைந்தனர்.
குறித்த தாக்குதலை நடத்திய நபர் DGSI பாதுகாப்பு வலையத்தில் உள்ளவர். நேற்றுமுன் தினம் வியாழக்கிழமை வழமையான விசாரணைக்காக பொலிஸ் நிலையம் சென்று வந்துள்ளார்.
அவரோடு சேர்த்து சந்தேகத்தின் பேரில் நேற்று கைது செய்யப்பட்டுள்ள 16 வயது சகோதரர் ஏற்கனவே பயங்கரவாத தாக்குதலை நடத்த திட்டமிட்ட குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்படு விடுதலையானவர் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
(Visited 5 times, 1 visits today)