ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் சாதனை படைத்த ரோகித் சர்மா
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி, இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 30.3 ஓவரில் 192 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டி அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அவர் 63 பந்துகளில் 86 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதில் 6 பவுண்டரி 6 சிக்சர்கள் அடங்கும்.
6 சிக்சர்கள் விளாசியதன் மூலம் ரோகித் சர்மா புதிய சாதனையை படைத்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 300 சிக்சர் அடித்த 3-வது வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
இவருக்கு முன்னர் சாகித் அப்ரிடி 351 சிக்சருடன் முதல் இடத்திலும் கிறிஸ் கெய்ல் 331 சிக்சருடன் 2-வது இடத்தில் உள்ளனர்.