காஸா மீது வான்வழித்தாக்குதல் : 614 குழந்தைகள் பலி!
காஸா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,900 ஆக உயர்ந்துள்ளது.
அவர்களில் 60 சதவீதம் பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி, தாக்குதல்களில் 614 குழந்தைகளும் 370 பெண்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும், இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களால் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 7500ஐ தாண்டியுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, காஸா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது ஹமாஸ் அமைப்பினரால் இஸ்ரேலில் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட குழு ஒன்றின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.





