மழையால் குழந்தைகளுக்கு பல நோய்கள் பரவும் ஆபத்து
தற்போது பெய்து வரும் மழை காரணமாக குழந்தைகளுக்கு பல்வேறு நோய்கள் பரவி வருவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அந்த நிலைமைகள் தொடர்பில் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்துவது மிகவும் அவசியமானது என பொரளை ரிட்வே சிறுவர் வைத்தியசாலையில் குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்தார்.
அசாதாரண நிலைகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட அளவு மட்டுமே பாராசிட்டமால் கொடுக்குமாறு பெற்றோர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
சுவாச நோய்கள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் கண் நோய் பரவி வருவதாக சுகாதார திணைக்களம் மக்களுக்கு தெரிவிக்கின்றது. நோய் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கண்களில் வலி, கண்ணீர், கண்கள் சிவத்தல், கண் அரிப்பு, தலைவலி, சூரிய ஒளியைப் பார்ப்பதில் சிரமம் மற்றும் கண்கள் வறண்டு போவது ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.