இஸ்ரேலுக்கு இராணுவ உதவியை வழங்கும் ஜேர்மனி
ஜேர்மனி இஸ்ரேலுக்கு இராணுவ உதவியை வழங்குவதாக தெரிவித்துள்ளது.
மற்றும் இஸ்ரேல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து உள்நாட்டில் ஹமாஸ் குழுவிற்கான ஆதரவை முறியடிப்பதாக உறுதியளிக்கிறது.
ஜேர்மன் இராணுவத்தால் தற்போது குத்தகைக்கு எடுக்கப்பட்ட ஐந்து ஹெரான் டிபி போர் ட்ரோன்களில் இரண்டை பயன்படுத்த இஸ்ரேலிய கோரிக்கைக்கு ஒப்புக்கொண்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் பிரஸ்ஸல்ஸில் கூறுகையில், போர்க்கப்பல்களுக்கான வெடிமருந்துகளை இஸ்ரேல் கோரியுள்ளது, அது இப்போது விவாதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் ஜேர்மன் பாராளுமன்றத்தில் ஷோல்ஸ் கூறுகையில், “உதாரணமாக காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும்” தேவைகள் இருந்தால் ஜேர்மனிக்கு தெரிவிக்குமாறு இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகுவிடம் கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.