பீகாரில் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் நால்வர் பலி
 
																																		டெல்லியின் ஆனந்த் விஹார் டெர்மினலில் இருந்து அசாமின் காமாக்யா நோக்கிச் செல்லும் அதிவிரைவு ரெயிலின் (12506) 3 பெட்டிகள் பீகாரில் உள்ள ரகுநாத்பூர் ரயில் நிலையம் அருகே இரவு தடம் புரண்டன விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியானார்கள்.
இந்த விபத்தில் பல பயணிகள் காயம் அடைந்துள்ளனர். மேலும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
காயம் அடைந்த பயணிகளை மீட்ட காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவ குழுவினர் மற்றும் அதிகாரிகளுடன் விபத்து நிவாரண வாகனம் சம்பவ இடத்திற்கு புறப்பட்டுள்ளதாக கிழக்கு மத்திய ரெயில்வே மண்டலம் தகவல் தெரிவித்துள்ளது
(Visited 9 times, 1 visits today)
                                     
        



 
                         
                            
