சந்தைக்கு அறிமுகமான புதிய புதிய லொத்தர் சீட்டுக்கள்!

தேசிய லொத்தர் சபையின் 60 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, புதிய லொத்தர் சீட்டுகளான ‘மெகா மில்லியனர்ஸ்’ மற்றும் ‘மெகா 60’ சந்தைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (10) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்த நிகழ்வுகள் நடைபெற்றன.
அத்துடன் வெற்றியாளர்களுக்கான காசோலைகளும் வழங்கப்பட்டன.
தேசிய லொத்தர் சபையின் தலைவர் கலாநிதி சமீர சி. யாப்பா அபேவர்தன, பணிப்பாளர் கலாநிதி கித்சிறி மஞ்சநாயக்க மற்றும் பொது முகாமையாளர் சட்டத்தரணி ஹஷினி ஜயசேகர மற்றும் அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
(Visited 10 times, 1 visits today)