இஸ்ரேல் – ஹமாஸ் மோதலில் 09 அமெரிக்கர்கள் பலி!
இஸ்ரேல் மீதான வார இறுதியில் ஹமாஸ் படையினர் முன்னெடுத்த தாக்குதல்களில் குறைந்தது 09 அமெரிக்க குடிமக்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது.
அமெரிக்கக் குடிமக்களின் தீர்மானிக்கப்படாத எண்ணிக்கையில் காணாமல் போயுள்ளனர் எனவும், அவர்கள் குறித்து கணக்கில் வரவில்லை என்றும் அமைச்சகம் மேலும் கூறியுள்ளது.
காணாமல் போனவர்கள் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டார்களா, கொல்லப்பட்டார்களா அல்லது தலைமறைவாக இருக்கிறார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை எனக் கூறப்படுகிறது.
அவ்வாறு காணமல்போனவர்களின் குடும்பங்களுடன் வெளியுறவுத்துறை தொடர்பில் உள்ளதாகவும், அனைத்து பொருத்தமான தூதரக உதவிகளையும் வழங்குகிறது” என்றும் செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறினார்.
(Visited 10 times, 1 visits today)





