ஹமாஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இளம் யுவதி
 
																																		ஹமாஸ் தீவிரவாதிகளால் 25 வயது பெண் கடத்தப்பட்ட அதிர்ச்சி காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
காணாளியில், நோவா ஆர்கமணி தாக்கியவரின் மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் அமர்ந்து தனது உயிருக்காக மன்றாடுவதைக் காட்டுகிறது.
“என்னைக் கொல்லாதே! வேண்டாம், வேண்டாம், வேண்டாம்” என்று கூச்சலிடும் போது குறித்த யுவதி ஆயுததாரிகளால் வலுக்கட்டாயமாக கடத்திச் செல்லப்பட்டதை ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
அவரது காதலன் அவி நாதன் ஹமாஸால் எப்படி கொடூரமாக கையாளப்படுகிறார் என்று நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போது அவரது காதலனையும் காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இசை விழாவில் கலந்து கொள்வதற்காக இந்த ஜோடி தெற்கு இஸ்ரேலுக்கு வந்துள்ளது.
கடத்தப்பட்ட யுவதியின் தோழி, தான் இலங்கைக்கு சுற்றுலா சென்று திரும்பியதாகவும், குடும்பத்தில் ஒரே குழந்தை என்றும் கூறினார்.
பாலஸ்தீன பயங்கரவாதிகள் காஸாவுக்குள் நுழைந்ததில் 22 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேலின் மேகன் டேவிட் ஆடோம் அவசர மருத்துவ சேவைகள் தெரிவித்துள்ளனர்.
 
        



 
                         
                            
