இலங்கையில் அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட மாட்டாது என அறிவிப்பு!
இலங்கையில் அரச சேவையின் மிகவும் அத்தியாவசியமான பகுதிகளைத் தவிர, அரச துறையில் எதிர்காலத்தில் எந்தவொரு வேலைக்கும் புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட மாட்டாது என கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
அரச சேவையானது தற்போது அரசாங்கத்திற்கு தாங்க முடியாத பிரச்சினையாக மாறியுள்ளதாக தெரிவித்த அவர், உலகிலேயே அதிக அரச ஊழியர்களுக்கும் சனத்தொகைக்கும் இடையிலான விகிதத்தில் இலங்கையும் ஒன்று என அவர் குறிப்பிட்டுள்ளார்.
“நாட்டில் 1.5 மில்லியன் பொது ஊழியர்கள் உள்ளனர், அதே நேரத்தில் நாட்டின் மக்கள் தொகை 21 மில்லியன் ஆகும். மக்கள் தொகையில் சுமார் 12 பேருக்கு ஒரு அரசு ஊழியர் இருக்கிறார். இது உலகிலேயே பொது ஊழியர்களின் மிக உயர்ந்த விகிதங்களில் ஒன்றாகும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
“இதன் பொருள் நாம் ஒரு பெரிய ‘தேசிய சுமையை’ சுமக்கிறோம். இதற்கு மேல் இதை செய்ய முடியாது” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.