ஆப்கானிஸ்தானை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் : 2000 பேர் பலி!
மேற்கு ஆப்கானிஸ்தானை உலுக்கிய வலுவான நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,000 ஆக உயர்ந்துள்ளதாக தலிபான் அரசாங்க செய்தித் தொடர்பாளர் இன்று (08.410) அறிவித்தார்.
இரண்டு தசாப்தங்களில் ஆப்கானிஸ்தானை தாக்கிய மிக மோசமான நிலநடுக்கங்களில் இதுவும் ஒன்றாகும்.
சனிக்கிழமையன்று மேற்கு ஆப்கானிஸ்தானில் 6.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பலத்த நிலநடுக்கங்களால் டஜன் கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாக நாட்டின் தேசிய பேரிடர் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆனால் தகவல் மற்றும் கலாச்சார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அப்துல் வாஹித் ராயன் கூறுகையில், ஹெராட்டில் நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை முதலில் அறிவிக்கப்பட்டதை விட அதிகமாக உள்ளது எனவும் சுமார் ஆறு கிராமங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இடிபாடுகளுக்கு அடியில் புதைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், அவசர உதவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.