இலங்கை

இலங்கையில் போதைப்பொருள் வழக்கில் தேடப்படும் சந்தேகநபர் இந்தியாவில் கைது

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக படகு மூலம் வந்து இறங்கி பாம்பன் குந்து கால் பகுதியில் சுற்றி திரிந்த ஒருவரை அப்பகுதியில் இருக்கும் மீனவர்கள் பிடித்து பாம்பன் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

பின்னர் பாம்பன் காவல் நிலைய போலீசார் அவரை குந்துகால் பகுதியில் இருந்து மீட்டு அழைத்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்துள்ளனர்.

விசாரணையில் அவர் இலங்கை மன்னர் குலாஸ் ஏழாம் வட்டாரம் பேச்சாளை பகுதியை சேர்ந்த 43 வயது உடைய தேவராஜன் என தெரியவந்துள்ளது.

இவர் ஏற்கனவே 1990 ஆம் ஆண்டு தனது குடும்பத்துடன் தனுஷ்கோடிக்கு அகதியாக வந்து மண்டபம் அகதிகள் முகாமில் தங்கி இருந்து பின்பு 1996 ஆம் ஆண்டு இலங்கைக்கு குடும்பத்துடன் ராமேஸ்வரத்தில் இருந்து அப்போது இயங்கி வந்த ராமானுஜம் கப்பல் மூலமாக இலங்கை சென்றுள்ளார்,

இவர் அதன்பின் 2005 முதல் மன்னாரில் உள்ள அரசு மருத்துவமனையில் கார் ஓட்டுனராக பணிபுரிந்து வந்ததாகவும், கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான் வேலை செய்த மருத்துவமனையில் பியூனாக வேலை பார்க்கும் ரத்தினவேல் என்பவர் 100 கிராம் போதை ஜஸ் பொருளுடன் பிடிபட்டவுடன் அதை தேவராஜன் கொடுத்ததாக இலங்கை முருங்கன் காவல் நிலையத்தில் புகார் வந்துள்ளது,

தன்னை முருங்கன் காவல் துறையினர் தேடி வீட்டுக்கு வந்ததால் தப்பித்து பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்து பின்பு 6.10.2023 அன்று மாலை 6 மணி அளவில் தலைமன்னாரில் சுரேஷ் என்பவரின் ஏற்பாட்டில் இலங்கை படகிற்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் கொடுத்து தனுஷ்கோடி அருகே உள்ள தீடையில் ஆகஸ்ட் 7ஆம் திகதி வந்து இலங்கை படகில் இறக்கி விட்டதாகவும், இங்கிருந்து சுரேஷ் ஏற்பாடு செய்த இந்திய நாட்டுப் படகு ஒன்றில் அவரை தனுஷ்கோடி தீடையில் இருந்து ஏற்றிக் கொண்டு வந்து பாம்பன் குந்துகாலில் இறக்கி விட்டதாக பிடிபட்ட தேவராஜன் தெரிவித்துள்ளார்,

இவரை பொதுமக்கள் பிடிக்கும் போது அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த தங்கச்சிமடம் சூசையப்பர் பட்டினத்தை சேர்ந்த அடிமை மகன் சந்தியா டைமன் என்பவரையும் பாம்பன் போலீசார் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்,

இந்த சந்தியா டைமன் மீது ஏற்கனவே அகதிகளை படகில் ஏற்றி இறக்கி விட்டதாக வழக்கு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது,

இந்நிலையில் நிலையில் பிடிபட்ட இருவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 6 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்