WC – 81 ஓட்டங்களால் பாகிஸ்தான் அணி வெற்றி
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்று நடக்கும் 2-வது லீக்கில் பாகிஸ்தான் – நெதர்லாந்து அணிகள் மோதுகிறது.
இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 48.5 ஓவரில் 286 ரன்கள் எடுத்தது. நெதர்லாந்து அணி தரப்பில் பாஸ் டி லீடே 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் நெதர்லாந்து அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக விக்ரம்ஜித் சிங் – மேக்ஸ் ஓ’டவுட் ஆகியோர் ஆடினர்.
மேக்ஸ் ஓ’டவுட் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கொலின் அக்கர்மேன் 17 ரன்னில் வெளியேறினார்.
இந்நிலையில் விக்ரம்ஜித் சிங் உடன் பாஸ் டி லீடே ஜோடி சேர்ந்து பாகிஸ்தான் பந்து வீச்சை சுலபமாக எதிர் கொண்டு விளையாடினார்.
சிறப்பாக விளையாடிய விக்ரம்ஜித் சிங் அரை சதம் விளாசினார். அரை சதம் அடித்த கையோடு ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து பாஸ் டி லீடேயும் அரை சதம் அடித்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த நெதர்லாந்து அணி 41 ஓவர் முடிவில் 205 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால் பாகிஸ்தான் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.