சீரற்ற காலநிலை: ஆறு பேர் பலி -50,000 க்கும் அதிகமானோர் பாதிப்பு
சீரற்ற காலநிலை காரணமாக குறைந்தது 6 பேர் பலியாகியுள்ள அதேவேளை, பல மாவட்டங்களில் 50,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கையின்படி, 12 மாவட்டங்களில் உள்ள 13,027 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 53,399 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டங்களில் கொழும்பு களுத்துறை, கம்பஹா, நுவரெலியா, காலி, மாத்தறை, இரத்தினபுரி, கேகாலை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, புத்தளம் மற்றும் குருநாகல் ஆகியவை அடங்கும்.
மேலும், திடீர் வெள்ளம் மற்றும் பலத்த காற்று காரணமாக 720 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
இதேவேளை, மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
மேலும், மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.