இத்தாலியில் குவிந்த மில்லியனுக்கும் அதிகமான புலம்பெயர்ந்தோர்
இத்தாலிக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான புலம்பெயர்ந்தோர சென்றடைந்துள்ளது.
2013 ஆம் ஆண்டு முதல் இந்த புலம்பெயர்தோர் வந்தடைந்துள்ளனர். அதே நேரத்தில் நாட்டிற்கு வரும் மக்களின் இறப்பு விகிதம் 28,000 ஐத் தாண்டியுள்ளது.
இத்தாலியில் குடியேறியவர்களின் எண்ணிக்கை 2010ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் தொடங்கியது, குறிப்பாக 2013 இல், லிபியாவிலிருந்து புறப்பட்ட 368 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்தனர்.
Save the Children என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம், மத்தியதரைக் கடலில் குடியேறிய 28,000க்கும் அதிகமானோர் இத்தாலியை அடையும் முயற்சியில் இறந்துள்ளதாகவும், இதில் 1,143 சிறார்களும் உள்ளடங்குவதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த ஆண்டு நான்கு சதவீதம் அல்லது 100க்கும் மேற்பட்ட சிறார்கள் மத்திய தரைக்கடலில் இறந்துள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர்.
அதே சமயம் 112,000 ஆதரவற்ற சிறார்கள் 2014 முதல் கடல் வழியாக இத்தாலியை அடைந்துள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி 1 முதல், 11,600 க்கும் மேற்பட்ட சிறார்கள் மத்திய தரைக்கடலைக் கடந்து நாட்டை அடைந்துள்ளனர்.