ரஷ்யா படையெடுத்ததில் இருந்து 26,000 க்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை – உக்ரைன்
கடந்த ஆண்டு ரஷ்யா தனது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதில் இருந்து பொதுமக்கள் உட்பட 26,000 க்கும் அதிகமானோர் இன்னும் கணக்கில் வரவில்லை என்று உக்ரைன் தெரிவித்தது.
ரஷ்யப் படைகள் இன்னும் நாட்டின் ஐந்தில் ஒரு பகுதியை ஆக்கிரமித்துள்ளதால், இராணுவ உயிரிழப்புகள் குறித்த தரவுகளை இரு தரப்பினரும் தொடர்ந்து வெளியிடாததால், அதிகாரப்பூர்வமாக காணாமல் போனவர்களின் எண்ணிக்கையை மதிப்பிடுவது கடினம்.
“தற்போதைக்கு, 26,000 க்கும் அதிகமானோர் தேடப்பட்டு, சிறப்பு சூழ்நிலையில் காணாமல் போயுள்ளனர். இவர்களில் 11,000 பொதுமக்கள் மற்றும் சுமார் 15,000 ராணுவ வீரர்கள்” என்று துணை உள்துறை அமைச்சர் லியோனிட் டிம்சென்கோ தேசிய தொலைக்காட்சியில் தெரிவித்தார்.
இது அதிகாரப்பூர்வமாக சரிபார்க்கப்பட்ட நபர்களை மட்டுமே உள்ளடக்கியது என்று உள்துறை அமைச்சக அதிகாரி மரியானா ரேவா கூறினார்,
முழு நகரங்களையும் அழித்ததோடு ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்ற போரின் தொடக்கத்திலிருந்து உக்ரேனியப் பிரதேசத்தின் பெரும் பகுதிகள் ரஷ்ய ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளன.