குழந்தைகளிடையே அதிகரித்து வரும் நோய் குறித்து மருத்துவர் எச்சரிக்கை!
இலங்கையில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சிறுவர்கள் மத்தியில் பல நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக சிறுவர் வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, ஆஸ்துமா மற்றும் வைரஸ் காய்ச்சல் ஆகியவை இந்த நாட்களில் குழந்தைகளிடையே பொதுவாகக் காணப்படுவதாக மருத்துவர் சுட்டிக்காட்டுகிறார்.
“தற்போது பெய்து வரும் மழையுடன், சில பகுதிகளில் குளிர் காலநிலையும், வேறு சில பகுதிகள் வெள்ளத்திலும் மூழ்கியுள்ளன. இதன் விளைவாக பல நோய்கள் வேகமாக பரவுவதை நாங்கள் அவதானித்து வருகிறோம். குறிப்பாக, குழந்தைகளில் ஆஸ்துமா கணிசமாக அதிகரித்துள்ளது,” என்று அவர் கூறினார்.
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு சுத்தமான தண்ணீர் மற்றும் உணவு கிடைக்காவிட்டால் அவர்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.