இலங்கை

லாப் எரிவாயு விலையும் அதிகரிப்பு !

லாப் சமையல் எரிவாயுவின் விலையும் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படுகிறது.

இதன்படி, 5 கிலோகிராம் எரிவாயுவின் விலை 60 ரூபா அதிகரிக்கப்பட்டு 1595 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

அத்துடன், 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை 150 ரூபா அதிகரிக்கப்பட்டு 3985 ரூபா என்ற புதிய விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது.

மேலும் லிட்ரோ எரிவாயு விலை​யும் சற்றுமுன்னர் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு 343 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 3470 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 5 கிலோகிராம் எரிவாயு விலை 137 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1393 ரூபா என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2.3 கிலோகிராம் எரிவாயு 63 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 650 ரூபா என குறிப்பிடப்பட்டுள்ளது.

உலக சந்தையில் நிலவும் தற்போதைய விலைகளைக் கருத்தில் கொண்டு, லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் இன்று பிற்பகல் (அக்டோபர் 04) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது

(Visited 7 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்