இந்தியா

சிக்கிம் மாநிலத்தில் கனமழை: வெள்ளத்தில் சிக்கி 23 இராணுவ வீரர்கள் மாயம்

சிக்கிம் மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்ட ஆற்று வெள்ளத்தில் சிக்கி 23 இராணுவ வீரர்கள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமல் போயுள்ளனர்.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிமில் நேற்று முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் தீஸ்தா ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

ஆற்றை ஒட்டியுள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. நதியில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். கரையோரம் இருக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மாநில பேரிடர் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

சுங்தாங் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் நீர்மட்டம் திடீரென 15-20 அடி உயரத்திற்கு கீழ்நோக்கி அதிகரித்தது. லச்சேன் பள்ளத்தாக்கில் உள்ள இராணுவ முகாமை வெள்ளம் தாக்கியதால் அங்கிருந்த 23 இராணுவ வீரர்கள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், சில வாகனங்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ வீரர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நேற்று முதல், தெற்கு சிக்கிமில் உள்ள நம்ச்சி மற்றும் நாம்தாங் ஆகிய இடங்களில் முறையே 98.0மிமீ மற்றும் 90.5மிமீ மழை பெய்துள்ளது. மேலும் 3 – 4 நாட்களுக்கு இந்த பகுதியில் மிதமான மழை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

(Visited 9 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!