ஜெர்மனியில் 35 ஆயிரம் தாதிகளுக்கு பற்றாக்குறை – தீவிரமாக தேடும் அரசாங்கம்
ஜெர்மனியில் மருத்துவ தாதிகளுக்கு பற்றாக்குறை உள்ளதாக புள்ளி விபரம் ஒன்று வெளியாகியுள்ளது.
ஜெர்மனி நாட்டுக்கு பயிற்றப்பட்ட தொழிலாளர்கள் தேவை என்கின்ற விடயம் தொடர்ச்சியாக பேசப்பட்டு வரும் நிலையில் தற்பொழுது ஜெர்மனியில் மருத்துவ தாதிகளுக்கான பற்றாக்குறை நிலவுகின்றது.
மொத்தமாக தற்பொழுது 35000 பேர் இவ்வாறு உடனடி தேவைகளில் உட்படுத்தப்படுவதாக தெரியவந்துள்ளது.
அதாவது 35000 மருத்துவ தாதிமார்கள் பல லட்சக்கணக்கானவர்களை பராமறிக்க வேண்டிய சூழ்நிலையில் தற்பொழுது தேவைப்படுகின்றார்கள்.
மொத்தமாக 2003 ஆம் ஆண்டு ஜெர்மனியில் 2 மில்லியன் பேர் பாராமறிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளதாகவும்,
2023 ஆம் ஆண்டு எண்ணிக்கையானது 50 லட்சமாக உயர்வடைந்துள்ளதாக தெரியவந்து இருகின்றது.
இந்நிலை நீடித்தால் 2055 ஆம் ஆண்டு மொத்தமாக 6.8 மில்லியன் மக்கள் பராமறிக்க வேண்டிய நிலையில் இருப்பார்கள் என தெரியவந்துள்ளது.