இலங்கையில் மீண்டும் உச்சத்தை தொட்ட தேசிக்காய் விலை!

இலங்கையில் தேசிக்காய் ஒரு கிலோவின் விலை 2100 ரூபாவை எட்டியுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி மலையகத்தின் பல பகுதிகளில் தேசிக்காய் ஒன்றின் விலை சுமார் 50 ரூபாவுக்கு விற்கப்படுவதாக அப்பகுதி வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்விலைக்கு தேசிக்காய் களை கொள்வனவு செய்து, நுகர்வோருக்கு விற்பனை செய்ய முடியாதுள்ளதாக வர்த்தகர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
தேசிக்காய் அறுவடை குறைந்துள்ளமையே, விலை அதிகரித்த மைக்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊவா மற்றும் வரட்சியுடனான பகுதிகளிலேயே தேசிக்காய்ச் செய்கை அதிகளவில் முன்னெடுக்கப்படுகின்றன.
(Visited 30 times, 1 visits today)