கொலை குற்றத்தை மறைக்க கடத்தல் வழக்குப் பதிவு செய்த பாகிஸ்தானியர்
ஒரு கொடூரமான சம்பவத்தில், பாகிஸ்தானின் லாகூர் நகரில், தனது குற்றத்தை மறைக்க, தனது நான்கு மைனர் குழந்தைகளை கால்வாயில் தூக்கி எறிந்து கொலை செய்துள்ளார்.
கொல்லப்பட்ட குழந்தைகள் சபீர், ஆயிஷா, நபிஹா மற்றும் சாமியா என அடையாளம் காணப்பட்டனர்.இவர்கள் அனைவரும் 5 முதல் 11 வயதுடையவர்கள்.
குறைந்த வருமானம் மற்றும் மக்கள் தொகை கொண்ட கஹ்னாவில் வசிக்கும் முஹம்மது அஸீம், தனது நான்கு குழந்தைகளும் கடத்தப்பட்டதாக போலீசில் புகார் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
அடையாளம் தெரியாத கடத்தல்காரர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கினர்.
“விசாரணையின் போது, புலனாய்வாளர்கள் அசீம் மீது சந்தேகம் கொண்டு அவரை விசாரித்தனர்,விசாரணையின் போது, அவர் தனது மூன்று மைனர் மகள் மற்றும் ஒரு மகனை கால்வாயில் வீசியதை வெளிப்படுத்தினார்.
அவர் தனது மனைவியுடன் சண்டையிட்ட பிறகு குற்றத்தை செய்ததாக கூறினார்” என்று போலீசார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் தனது குற்றத்திலிருந்து தப்பிக்க கடத்தல் நாடகத்தை அரங்கேற்றியதாக அவர்கள் தெரிவித்தனர்.
சந்தேக நபர் தனது நான்கு பிள்ளைகளையும் பைக்கில் அழைத்துக்கொண்டு கால்வாய் வீதிக்கு சென்று பர்கர்களை(உணவு) கொடுத்ததாக பொலிஸ் அதிகாரி முஹம்மது அலி தெரிவித்தார்.
கால்வாய் ஓரத்தில் அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அவர் அவர்களை அதில் தள்ளினார்.
“சந்தேக நபர் தனது ஒழுக்கக்கேடான நடவடிக்கைகளை மறைப்பதற்காக முதன்மையாக தனது குழந்தைகளைக் கொன்றார்” என்று அதிகாரி கூறினார்.
மேலும் லாகூர் கால்வாயில் இருந்து சடலங்களை மீட்க காவல்துறை மற்றும் மீட்பு 1122 முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
சந்தேக நபர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.