கோதுமை மாவிற்கான விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்துவது அவசியம்!
கோதுமை மாவின் விலையை ஒழுங்குபடுத்துவதற்கான விலைச் சூத்திரத்தை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியத்தை பொது நிதிக்கான குழுவான கோப்க் குழு (CoPF) வலியுறுத்தியுள்ளதாக என்று நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கோப் குழு அண்மையில் கூடிய போதே இதற்கான வலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பலதரப்பட்ட முறையில் செயல்படும் வகையில் விலை சூத்திரம் உடனடியாக தயாரிக்கப்பட வேண்டும் என்றும் கோப்க் குழுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் களஞ்சியசாலைகளில் தற்போது உள்ள கோதுமை மாவின் அளவை கணக்கிட்டு 2 மாதங்களுக்குள் கோதுமை மா தொடர்பான பிரச்சினை தொடர்பான கணக்காய்வு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு தலைமை கணக்காய்வாளர் திணைக்களத்திற்கு அமைச்சர் ஹர்சடி சில்வா பணிப்புரை விடுத்துள்ளார்.
கோதுமை மாவிற்கும் விலை சூத்திரம் இருந்தால், தனிப்பட்ட கட்சிகளின் விருப்பத்திற்கு ஏற்ப விலையை தீர்மானிக்க வாய்ப்பில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.