அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகரை பதவி நீக்க நடவடிக்கை
அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியை பதவி நீக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசுக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அவர் சமீபத்தில் அமெரிக்க அரசு நிறுவனங்களுக்கு நிதி வழங்குவதற்கான சட்டத்தினை நிறைவேற்ற குடியரசுக் கட்சியின் ஆதரவை வழங்க நடவடிக்கை எடுத்திருந்தார்.
இதன் காரணமாக அமெரிக்க அரசை முடக்கும் முடிவு தடுக்கப்பட்டது. இதற்கு முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பை ஆதரிக்கும் குடியரசு கட்சியின் மற்றொரு குழு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சபாநாயகர் அமெரிக்க துணை ஜனாதிபதிக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளார்.
அவருக்கு பதவி விலகுவதற்கான பிரேரணை வழங்கப்பட உள்ளது, மேலும் எந்த ஒரு அமெரிக்க சபாநாயகரும் இராஜினாமா செய்யும் பிரேரணை மூலம் இதுவரை பதவி நீக்கம் செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.