அறிவியல் & தொழில்நுட்பம் முக்கிய செய்திகள்

‘Generative AI’ தொழில்நுட்பத்துடன் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்திய Adobe!

கம்ப்யூட்டர் சாப்ட்வேர் நிறுவனமான அடோப், புகைப்பட எடிட்டர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் அதன் புகைப்பட எடிட்டிங் சாப்ட்வேர் ஆன ஃபோட்டோஷாப்பை இணைய சேவையில் நேரடியாக உபயோகப் படுத்திக்கொள்ளும்படி அறிமுகம் செய்துள்ளது.

அதன்படி புதிதாக வெளியிடப்பட்ட அடோப் ஃபயர்ஃபிளை ஆனது செயற்கை நுண்ணறிவின் ஒரு பகுதியான ஜெனரேட்டிவ் ஏஐ அம்சங்களுடன் வெளியாகியுள்ளது.

இதில் ஜெனரேட்டிவ் ஏஐ அம்சங்களான ஜெனரேட்டிவ் ஃபில் மற்றும் ஜெனரேட்டிவ் எக்ஸ்பாண்ட் உட்பட பல அம்சங்கள் உள்ளன. இந்த ஃபோட்டோஷாப்பை இணையத்தில் பயன்படுத்த பீட்டா வெர்சன் ஆனது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் இனி போட்டோஷாப்பை பதிவிறக்கம் செய்யாமலே இணையத்தில் நேரடியாக பயன்படுத்த முடியும். இந்த அம்சங்கள் பல செயல்பாடுகளுக்கு பெரிதளவில் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த ஜெனரேட்டிவ் ஃபில்லைப் பயன்படுத்தும் பயனர்கள், நீங்கள் எடிட் செய்யும் படத்தில் ஏதேனும் சேர்க்கவேண்டுமென்றால், அதன் பெயரை உள்ளிடுவதன் மூலமாக சேர்க்க முடியும்.

அதாவது எடுத்துக்காட்டாக, நீங்கள் ஒரு கடற்கரை காட்சியை எடிட் செய்து கொண்டிருக்கும் பொழுது, உங்களுக்கு சூரியன் மறைவது போன்ற ஒரு படம் வேண்டும் என்றால், அதனை நீங்கள் டைப் செய்து உள்ளிடுவதன் மூலம் சேர்க்க முடியும். இந்த அம்சத்தை 100க்கும் மேற்பட்ட மொழிகளில் பயன்படுத்தலாம்.

இதே அம்சம் ஒரு படத்திலிருந்து பொருட்களை அகற்ற பயன்படுத்தலாம். இணையத்தில் உள்ள இந்த ஃபோட்டோஷாப் வெப் ஆனது டெஸ்க்டாப் பயன்பாட்டில் இருக்கும் ஃபோட்டோஷாப்பில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் கருவிகளைக் கொண்டுள்ளது. மூவ் டூல், கிராப் டூல், ட்ரான்ஸ்பார்ம் டூல், ஆப்ஜெக்ட் செலக்சன் டூல், பிரைட்னஸ் & கலர் அட்ஜஸ்ட்மெண்ட் டூல், பேக்ரவுண்ட் ரிமூவர், பிரஸ் மற்றும் எரேசர் டூல், டைபிங் டூல், ஐ டிராப்பர், பேட்ச் டூல் போன்ற டெஸ்க்டாப் பயன்பாட்டில் இருக்கும் அம்சங்களையும் கொண்டுள்ளது.

ஜெனரேட்டிவ் ஃபில் மற்றும் ஜெனரேட்டிவ் எக்ஸ்பாண்ட் ஆகிய அம்சங்கள் கடந்த ஜூன் மாதம் ஃபோட்டோஷாப் டெஸ்க்டாப்பில் வெளியிடப்பட்டது. அதை பயன்படுத்த, ஜெனரேட்டிவ் ஃபில் அம்சம், ஃபோட்டோஷாப் வெர்சன் 24.6-ஐ நிறுவியிருக்க வேண்டும். இப்பொழுது இதே அம்சம் இணையத்திலும் உள்ளது. இந்த இணைய அடிப்படையில் ஆன ஃபோட்டோஷாப் சேவையானது மூன்று விதமான கட்டணங்கள் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

(Visited 10 times, 1 visits today)

SR

About Author

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்
error: Content is protected !!