பிரான்ஸில் தீவிரமடையும் கொரோனா தொற்று – மீண்டும் தடுப்பூசி வழங்கு பணி ஆரம்பம்
பிரான்ஸில் கொவிட் 19 பரவல் மீண்டும் அச்சுறுத்தலாக மாறியுள்ள நிலையில், புதிய தடுப்பூசி போடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எளிதில் தொற்றுக்குள்ளாகுபவர்கள், நீண்டலாக நோயுடன் வாழ்பவர்கள் மற்றும் முதியோர்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
நேற்று முதல் பகுதி பகுதியாக தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பிரான்சில் கொவிட் 19 பரவல் மீண்டும் ஆரம்பித்துள்ளது.
கோடைகாலம் நிறைவுக்கு வந்ததில் இருந்து பல்வேறு நகரங்களில் கொவிட் 19 வைரஸ் மற்றும் அதன் திரிபு வகைகள் பிரான்சில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கடந்த வாரத்தில் சுகாதார அமைச்சர் Aurélien Rousseau தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், கர்ப்பிணி பெண்களுக்கும், எளிதில் தொற்றுக்குள்ளாகக்கூடிய நபர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி ஆரம்பமாக உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.