சுவிஸில் ஏற்பட்டுள்ள பாதிப்பு – வரலாறு காணாத வேகத்தில் உருகும் பனியோடைகள்

சுவிட்ஸர்லந்தின் வரலாறு காணாத வேகத்தில் பனியோடைகள் உருகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த இராண்டுகளில் மட்டும் அவற்றின் ஒட்டுமொத்த அளவு 10 சதவீதம் சுருங்கியுள்ளது. இதேவேகத்தில் அவை உருகினால், ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் உள்ள பனியோடைகள் முற்றிலும் காணாமல்போகும் சாத்தியம் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆல்ப்ஸ் பகுதியில் உள்ள பாதிக்கும் அதிகமான பனி ஓடைகள் சுவிட்ஸர்லந்தில் இருக்கின்றன. பருவநிலை மாற்றத்தின் காரணமாக அங்கு வெப்பநிலை அதிவேகமாகக் கூடிவருகிறது.
பூமியிலுள்ள மற்ற பகுதிகளின் சராசரியை விட சுமார் இருமடங்கு வேகமாக அது அதிகரிக்கிறது.
கடந்த ஆண்டு பனியோடைகள் வரலாறு காணாத வேகத்தில் உருகின. அதற்கு அடுத்தபடியாக இந்த ஆண்டு உருகும் வேகம் பதிவாகியுள்ளது.
அதாவது 1990க்கு முந்திய 30 ஆண்டுகளில் உருகிய பனியோடை அளவுக்கே கடந்த ஈராண்டில் பனியோடை உருகியுள்ளது.