நாளை மதுபான சாலைகளுக்கு பூட்டு

நாளை (03) நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் நாளைய தினம் சர்வதேச மது ஒழிப்பு தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
இதனை முன்னிட்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை மதுவரித் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரான மேலதிக மதுவரி ஆணையாளர் நாயகம் கபில குமாரசிங்க தெரிவித்தார்.
இது தொடர்பில் நாடளாவிய ரீதியில் உள்ள மதுபானக் கடைகளுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த காலப்பகுதியில் கலால் சட்டங்களை மீறும் பட்சத்தில், உரிமம் பெற்ற இடங்கள் மற்றும் நபர்களுக்கு அதிகபட்ச சட்டம் அமுல்படுத்தப்படும் என கலால் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
(Visited 12 times, 1 visits today)