இலங்கை

நாளைய தினம் முல்லையில் பாரிய போராட்டத்தில் ஈடுபடவுள்ள வடகிழக்கு சட்டத்தரணிகள்

வடகிழக்கு சட்டத்தரணிகள் நாளை(03) முல்லையில் பாரிய போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர் மற்றும் முல்லைத்தீவு சட்டத்தரணிகள் காலவரையறையின்றி தொடர் நீதிமன்றப் புறக்கணிப்பு

முல்லைத்தீவு நீதிபதி ரீ. சரவணராஜா அவர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் இன்று தொடக்கம் காலவரையறையின்றி தொடர் நீதிமன்றப் புறக்கணிப்புகணிப்பை செய்வதாக முடிவெடுத்துள்ளனர்

முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கத்தினைச் சார்ந்த சட்டத்தரணிகள் அனைவரும் நீதிமன்ற வழக்குகளில் முன்னிலையாகாது தொடர்ந்து நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணிப்பார்கள்.எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

The Pandemic Strikes Law, Lawyers and the Legal System Hard – The Leaflet

இதேவேளை முல்லைத்தீவு நீதிபதி ரீ. சரவணராஜா அவர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக நாளை (03.09.2023) காலை 10 மணிக்கு முல்லைத்தீவு நீதிமன்றம் முன்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் இருந்து அதிகளவான சட்டத்தரணிகள் இணைந்து மாபெரும் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

குறிப்பாக முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் கிளிநொச்சி, வவுனியா, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்கள் உள்ளிட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்து சட்டத்தரணிகள் சங்கங்களின் சட்டத்தரணிகளும் இணைந்து இந்த பாரிய போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது

(Visited 8 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்