எரிபொருள் விலை அதிகரிப்பு : சினோபெக் நிறுவனம் அறிவிப்பு

இன்று (01) மாலை 6 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சினொபெக் நிறுவனம் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொண்டுள்ளது.
சினோபெக் நிறுவனம் இன்று (01.10.2023) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலையை 6 ரூபாவால் அதிகரித்துள்ளது.
அதன்படி அதன் புதிய விலை 420 ரூபாவாகும்.
அதே நேரம் Auto Diesel லீட்டர் ஒன்றின் விலையை 10 ரூபா அதிகரித்துள்ளது.அதன்படி அதன் புதிய விலை 348 ரூபா ரூபாவாகும்.
அதே நேரம் Super Diesel லீட்டர் ஒன்றின் விலை 61 ரூபா அதிகரித்துள்ளதுடன்அதன் புதிய விலை 417 ரூபாவாகும்.
எனினும் ஒக்டேன் 92 ரக பெட்ரோல் விலையில் எந்த திருத்தமும் மேற்கொள்ளப்படாத நிலையில் 358 ரூபாவிற்கே விற்பனை செய்யப்படுகிறது.
(Visited 10 times, 1 visits today)