ஜெர்மனியில் ஆட்கடத்தல் கும்பல் அட்டகாசம் – பொலிஸார் அதிரடி நடவடிக்கை
ஜெர்மனிய நாட்டுக்குள் அகதிகளாக வந்து சேர்வதற்கு பல நாடுகளில் இருந்து பல விதமான முறையில் மக்கள் தஞ்சம் அடைவது தொடர்பாக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஜெர்மனியில் வாழ்ந்து வருகின்ற சிரியா நாட்டு மனித கடத்தல்காரர்கள் மீது ஜெர்மனி அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்கின்றது.
100க்கும் மேற்பட்ட சிரியா நாட்டு அகதிகளை ஜெர்மன் நாட்டுக்கு கடத்தி வந்த சிரயா நாட்டை சேர்ந்த அகதி ஆட்கடத்தல் கும்பல் ஒன்று மீது பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கெண்டுள்ளார்கள்.
அதாவது ஜெர்மனியின் முக்கிய நகரமான லக்பென் மற்றும் நீடசக்சன் போன்ற பிரதேசங்களில் இந்த சிரியா அகதிகளுடைய வீடுகள் முற்றுகையிட்டு சோதனையிடப்பட்டுள்ளனர். இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் 4 பேர் தற்பொழுது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதாவது 2 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் 100க்கும் மேற்பட்ட சிரியா நாட்டு அகதிகளை ஜெர்மன் நாட்டுக்கு சட்டவிரோதமாக கடத்தி வந்ததாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்படடுள்ளன.