இலங்கை

சர்வதேசம் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு பொறுப்பு கூற வைக்க வேண்டும் – து.ரவிகரன்

சர்வதேசம் இலங்கை அரசாங்கத்தினுடைய போக்குகளிற்கு பொறுப்பு கூற வைக்க வேண்டும் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி பதவி விலகல் தொடர்பாக இன்றையதினம் (30.09.2023) முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகியுள்ளதாக தற்போது கருத்துக்கள் பரிமாறப்பட்டு கொண்டு இருக்கிறது. இதனால் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மக்கள் மட்டுமல்ல வடக்கு கிழக்கு மற்றும் உலக அரங்கில் உள்ள தமிழ் மக்கள் அனைவரும் பதவி விலகலால் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறார்கள்.

AR-673 (2018) என்ற வழக்கில் பௌத்த விகாரை கட்டப்படுகின்ற போது முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு விட்டது என்ற கருத்தை உடனடியாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்யப்பட்டு அதன் பிரகாரம் சட்டத்தரணிகள் ஊடாக முல்லைத்தீவு நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் மூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!