அமேசான் காடுகளில் காத்திருக்கும் ஆபத்து – பாதுகாக்க உத்தரவு
அமேசான் காடுகளில் வறட்சி ஏற்படும் அபாயம் நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
காலநிலை மாற்றம் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் நீர்நிலைகளை பாதுகாக்க அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தென் அமெரிக்கா கண்டத்தின் வட பகுதியில் உள்ள அமேசான் காடுகள் ‘உலகத்தின் நுரையீரல்’ என்று அழைக்கப்படுகிறது. 70 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது.
இந்த காடுகளில் 39 ஆயிரம் கோடி மரங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. உலகில் எந்த பகுதியிலும் இல்லாத மரங்கள் இங்கு காணப்படுகின்றன. 16 ஆயிரம் வகையான உயிரினங்கள் இங்கு வசிக்கின்றன.
இவற்றில் ஏராளமானவை மனிதர்களால் அறியப்படாதவை. பிரேசில், பெரு, பொலிவியா, கொலம்பியா, வெனிசூலா, கயானா, சுரினாம், பிரெஞ்ச் கயானா, ஈக்வடார் ஆகிய 9 நாடுகளில் பரந்து விரிந்து கிடக்கிறது அமேசான் காடுகள்.
இந்த காடுகளின் பெரும்பகுதி பிரேசில் நாட்டில் உள்ளது. இங்கு ஏராளமான வினோத பறவைகள், பூச்சி வகைகள், விலங்குகள், 200 வகையான கொசுக்கள், ரத்தக்காட்டேரி வவ்வால்கள், கொடிய விஷம் கொண்ட பாம்புகள் என நாம் இதுவரை பார்த்திராத இந்த காடுகளில் உலா வருகின்றன.
காடு முழுவதும் அடர்த்தியான மரங்கள் என்பதால், தரையின் பெரும்பாலான பகுதிகள் சூரிய வெளிச்சத்தை பார்த்ததே கிடையாது. கணக்கில் அடங்காத இயற்கை வளங்கள் இங்கு கொட்டி கிடக்கின்றன.