சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களால் மக்கள் தொகையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
சிங்கப்பூரின் மக்கள்தொகை ஒரு வருடத்தில் 5% அதிகரித்துள்ளதாக புதிய புள்ளிவிபரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
தொற்றுநோயைத் தொடர்ந்து வெளிநாட்டு ஊழியர்கள் மீண்டும் சிங்கப்பூர வர ஆரம்பித்துள்ள நிலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 5.6 மில்லியனாக இருந்த சிங்கப்பூரின் மக்கள்தொகை இந்த ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி 5.9 மில்லியனாக அதிகரித்துள்ளது.
அவர்களில் 61% பேர் சிங்கப்பூரர்கள் என்றும் 9% பேர் நிரந்தரக் வாசிகள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 30% பேர் வெளிநாட்டு ஊழியர்கள் அல்லது வெளிநாட்டு மாணவர்கள் இங்கு உள்ளதாக தரவுகள் கூறியுள்ளன.
2022 ஜூன் முதல் இந்த ஆண்டு ஜூன் வரை சுமார் 162,000 வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூருக்கு வந்துள்ளனர்.
அவர்களின் பெரும்பகுதி வருகையால் மக்கள் தொகை அதிகரித்துள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.