விண்வெளியில் 371 நாள்கள் இருந்து சாதனை படைத்த விண்வெளி வீரர்..!

விண்வெளியில் அதிக நாள்கள் இருந்த அமெரிக்க விண்வெளி வீரர் பூமிக்குத் திரும்பியுள்ளார்.
ஃபிரெங்க் ருபியோவும் (Frank Rubio) 2 ரஷ்ய வீரர்களும் கடந்த ஆண்டு செப்டம்பரில் விண்வெளிக்குச் சென்றனர்.
அவர்கள் 6 மாதங்களுக்கு முன் திரும்பவிருந்தனர். விண்கலத்தில் கோளாறு ஏற்பட்டதால் பயணம் தடைப்பட்டது.
180 நாள் பணியாக இருந்திருக்க வேண்டிய பணி 371 நாட்கள் தங்கும் பணியாக மாறியது.
அவர்கள் புதிய விண்கலம் அனுப்பப்படும் வரை காத்திருக்கவேண்டியிருந்தது. ருபியோ விண்வெளியில் ஆக நீண்ட காலம் இருந்த அமெரிக்க வீரர் எனும் சாதனையைப் படைத்தார்.
உலகளவில் அத்தகைய சாதனையைப் படைத்தவர் விண்வெளியில் 437 நாள்கள் இருந்தார். ரஷ்யாவின் வெலெரி பொல்யாகொவ் (Valeri Polyakov) 1994 ஜூனவரிக்கும் 1995 மார்ச்சுக்கும் இடைப்பட்ட காலத்தில் விண்வெளியில் இருந்தார்.
(Visited 7 times, 1 visits today)