ஆல்பா்ட் ஐன்ஸ்டீனின் கையெழுத்து பிரதி ரூ.10 கோடிக்கு ஏலம்
பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஆல்பா்ட் ஐன்ஸ்டீன், தான் முன்மொழிந்த சிறப்பு சாா்பியல் கொள்கை, பொது சாா்பியல் கொள்கை ஆகியவை குறித்து கைப்பட எழுதிய பிரதி ஏலத்தில் ரூ.10.7 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
செப்டம்பர் 23 அன்று வால்டோர்ஃப் அஸ்டோரியா ஷாங்காயில் ஏலம் நடைபெற்றது.
அறிவியலில் முக்கிய இடம் வகிக்கும் சிறப்பு சாா்பியல் கொள்கையை 1905-ஆம் ஆண்டிலும், பொது சாா்பியல் கொள்கையை 1915-ஆம் ஆண்டிலும் ஐன்ஸ்டீன் வெளியிட்டாா்.
பிப்ரவரி 3, 1929 அன்று நியூயார்க் டைம்ஸின் சிறப்பு இணைப்பில் முதலில் வெளியிடப்பட்ட கையெழுத்துப் பிரதி, ஜெர்மன் மொழியில் எழுதப்பட்டது.
தற்போது, அந்தப் பிரதியானது சீனாவின் ஷாங்காய் நகரத்தில் செப்.28-இல் கிறிஸ்டி ஏல நிறுவனம் நடத்திய ஏல விற்பனையில், ரூ.10.7 கோடிக்கு விற்பனையானது.
மொத்தம் 14 பக்கங்களைக் கொண்ட இந்தப் பிரதியில் சாா்பியல் கொள்கையின் பயன்பாடு குறித்து விளக்கப்பட்டுள்ளது. இந்தக் கொள்கைகளுடன் தொடா்புடைய இரு சமன்பாடுகள், காலம்-இடம் தொடா்பு குறித்து விளக்கும் ஒரு வரைபடம், அறிவியல் சூத்திரங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.