ஐரோப்பா

ஸ்பெயின்: ஆசிரியை மற்றும் சக மாணவர்களை கத்தியால் குத்திய 14 வயது மாணவன்!

ஸ்பெயினில் பள்ளி ஒன்றில் 14 வயது மாணவன் ஒருவன், வகுப்பறையில் தன் ஆசிரியை மற்றும் சக மாணவர்களை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தெற்கு ஸ்பெயினின் Jerez de la Frontera நகரில் உள்ள பள்ளி ஒன்றில் காலைவேளையில் வகுப்புகள் தொடங்கும்போது இச்சம்பவம் நடந்துள்ளது.

14 வயது மாணவர் ஒருவர் கையில் கத்தியுடன் வகுப்பறையில் நுழைந்துள்ளார். கண்ணில் பட்டவரை எல்லாம் அவர் கத்தியால் குத்தத் தொடங்கியுள்ளார்.ஆசிரியர்கள் அவரை தடுக்க முயன்றபோது, குறித்த மாணவர் ஆசிரியை ஒருவரின் கண்ணில் கத்தியால் குத்தியுள்ளார். அத்துடன் மேலும் இரு ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்களையும் அவர் தாக்கியுள்ளார்.

Three teachers and student stabbed 'by teenager on knife rampage' at Spanish  school | The Independent

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் விரைந்து வந்து குறித்த மாணவரை கைது செய்தனர். காயமடைந்த ஆசிரியர்கள், மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.ஆனால் கண்ணில் கத்தியால் குத்தப்பட்ட ஆசிரியை ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் குறித்து அறிந்த பெற்றோர் பீதியடைந்துள்ளனர்.

தாக்குதல்தாரி மாணவர் தற்போது Jerez பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

(Visited 10 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்