ஸ்வீடனில் அதிகரித்து வரும் துப்பாக்கி வன்முறை சம்பவங்கள் : மூவர் பலி!
ஸ்வீடனில் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
கிரிமினல் கும்பல்களின் பகைமை உணர்வு காரணமாக ஏற்பட்ட வன்முறைகளில் குறித்த உயிரிழப்புகள் பதிவாகியதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதன்கிழமை பிற்பகுதியில், ஸ்டாக்ஹோம் புறநகர் பகுதியில் 18 வயது நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். சில மணிநேரங்களுக்குப் பிறகு, ஸ்வீடிஷ் தலைநகருக்கு தெற்கே ஜோர்ட்ப்ரோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் மற்றொருவர் காயமடைந்துள்ளார்.
அதேபோல் இன்றைய தினம் (28.09) ஸ்டாக்ஹோமுக்கு மேற்கே உள்ள உப்சாலாவில் நடந்த வெடி விபத்தில் 20 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவங்கள் குறித்த விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை ஸ்வீடனில் துப்பாக்கி வன்முறை காரணமாக செப்டம்பர் மாதத்தில் மாத்திரம், 11 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.