ஜெர்மனிக்குள் நுழைந்த 2 லட்சம் அகதிகள் – இந்தியர்களுக்கு நெருக்கடி
ஜெர்மனி நாட்டுக்குள் இந்த ஆண்டில் இதுவரை 2 லட்சத்துக்கு மேற்பட்ட அகதிகள் வந்து இருப்பதாக புள்ளி விபரம் வெளியாகியுள்ளது.
இதனால் ஜெர்மனி நாடு அகதிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் இந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்து இதுவரை மொத்தமாக 220116 அகதிகள் ஜெர்மன் நாட்டுக்கு வந்து அகத விண்ணப்பம் மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதாவது 2015 மற்றும 2016 ஆம் ஆண்டுகளை விட இந்த ஆண்டு ஜெர்மனியில் அகதி விண்ணப்பம் செய்தவர்களுடைய எண்ணிக்கையானது அதிகரித்துள்ளதாக தெரிவந்துள்ளது.
இந்த அகதிகளின் அதிகரிப்பை கட்டுப்படுத்த வேண்டும் என்று பிரதான எதிர்கட்சி பல தடவைகள் ஜெர்மன் அரசாங்கத்தை எச்சரித்து வருகின்றது.
அதாவது ஜெர்மன் நாட்டினுடைய தற்போதைய அரசாங்கத்துடைய அகதிகள் விடயத்தில் தாராளமான மனப்பான்மையை இவர்கள் கணித்து டொஷ்லான் பக்கற் என்று சொல்லப்படுகின்ற அகதிகளுடைய வருகையை கட்டுப்படுத்துவதற்கு ஏற்ற வகையில் புதிய ஒரு திட்டம் ஒ்றை பாராளு மன்றத்தில் முன்வைக்கின்றார்கள்.
அதாவது ஏற்கனவே ஜெர்மன் நாட்டிற்குள் சில கிழக்கு ஐரோப்பிய நாட்டில் இருந்து அகதி விண்ணப்பம் மேற்கொள்கின்ற நன்மையை இடை நிறுத்த வேண்டும் என்று இந்த பிரதான எதிர் கட்சியானது அரசாங்கத்திடம் வேண்டுதலை விடுத்து இருந்தது
இந்த புதிய டொஷ்லான் என்று சொல்லப்படுகின்ற இந்த கூற்றின் படி மொல்டாவியா, இந்தியா, மோராகோ ,அல்ஜிறியா போன்ற நாடுகளில் இருந்து ஜெர்மன் நாட்டுக்கு வருகின்ற அகதிகளுக்கு அகதி அந்தஸ்து முற்றாகவே வழங்க கூடாது என்றும் மேலும் இந்த நாடுகளை பாதுகாப்பான நாடுகளாக ஜெர்மன் அரசாங்கமானது பிரகடனப்படுத்துவதன் மூலம் இவர்களை இந்த நாட்டுக்கு வருவதை கட்டுப்படுத்த முடியும் என்றும் கருத்து கணிக்கப்பட்டுள்ளது.