இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் இந்த வருடத்தில் மாத்திரம் 16 நிலநடுக்கங்கள்
இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் இந்த வருடத்தில் மாத்திரம் 16 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிாளியாகியுள்ளன.
நில அதிர்வு கண்காணிப்பு நிலையம் இதனை தெரிவித்துள்ளது.
இவற்றில் புத்தல பிரதேசத்தில் சுமார் 06 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ள போதிலும் சுமார் 03 நிலநடுக்கங்களின் தாக்கத்தை மக்கள் உணர்ந்துள்ளதாக நிலையத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட நில அதிர்வு நிபுணர் நில்மினி தல்தென தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிறுவப்பட்டுள்ள 04 நில அதிர்வு கண்காணிப்பு நிலையங்களும் உயர் தொழில்நுட்ப நிலையங்கள் என நில அதிர்வு நிபுணர் நில்மினி தல்தேன தெரிவித்தார்.
நில இயக்க கணக்கீடுகளுக்கு நாட்டில் போதுமான தொழில்நுட்பம் ஏற்கனவே உள்ளது, ஆனால் அதன் துல்லியத்தை மேம்படுத்த கூடுதல் உபகரணங்கள் தேவை என்று அவர் தெரிவித்துள்ளார்.
(Visited 1 times, 1 visits today)