அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் விரைவில்….!
அயோத்தியில் மூன்று மாடி ராமர் கோவிலின் தரை தளம் கட்டும் பணி டிசம்பர் இறுதிக்குள் முடிக்கப்படும் என்றும், ஜனவரி 22 ஆம் திகதி கும்பாபிஷேகம் நடைபெறும் என்றும் கோயில் கட்டுமானக் குழுத் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
பிடிஐக்கு அவர் அளித்த பேட்டியில், ஜனவரி 20-24 திகதிகளில் எந்த நாளிலும் பிரதமர் நரேந்திர மோடி ‘பிரான் பிரதிஷ்டா’ தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இறுதி திகதி இன்னும் பிரதமர் அலுவலகத்தால் தெரிவிக்கப்படவில்லை, என்றார்.
ஒவ்வொரு ஆண்டும் ராம நவமி தினத்தன்று கருவறையில் உள்ள தெய்வத்தின் நெற்றியில் சூரியக் கதிர்கள் நொடிப்பொழுதில் விழும் வகையில், கோயிலின் சிகரத்தில் நிறுவப்படும் ஒரு கருவியை வடிவமைக்கும் பணி நடந்து வருவதாகவும் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
இது பெங்களூரில் கட்டப்பட்டு வருகிறது, அதன் வடிவமைப்பு விஞ்ஞானிகளால் மேற்பார்வையிடப்படுகிறது, என்றார்.