சிங்கப்பூரில் இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுச் செயலிழப்பு
சிங்கப்பூரில் இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் அப்பர் புகிட் திமா என்ற தீவையொட்டிய பகுதியில் செயல் இழப்பு செய்யப்பட்டது.
இந்த நேரத்தில் பயங்கர சப்தம் இருந்ததாகவும், முன்னேற்பாடாக சுமார் அரை கி.மீட்டர் தொலைவில் உள்ளவர்கள் வெளியேறுமாறு எச்சரிக்கப்பட்டிருந்தனர்.
சிங்கப்பூரில் கட்டுமானத் தளம் ஒன்றில் கடந்த புதன்கிழமை கண்டுபிடிக்கப்பட்ட அந்த வெடிகுண்டு 100 கிலோ எடை கொண்டது. அதை வேறு இடத்திற்கு மாற்றுவது ஆபத்து என்பதால், அது அவ்விடத்திலேயே செயலிழக்கச் செய்யப்பட்டது.
பாதுகாப்புக் கருதி அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள குடியிருப்பாளர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
கிட்டத்தட்ட 4,000க்கு மேற்பட்ட குடியிருப்பாளர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக என்று கூறப்படுகிறது.
(Visited 4 times, 1 visits today)